வெயில்
சூரியன் சுட்டெரிக்கும் கோடையில்
நீல வானம்,வெண்ணிற மேகமாய் என்னவன்!!!!!
வெயில் தணலாய் தாக்க
குளிர் தென்றலாய் உன் வருகை!!!!
மறைந்திடும் கானல் நீரில்
சில்லென்ற சாரலாய் உன் பார்வை!!!
வறண்டு காய்ந்த மண்ணில்
விழுந்த மழைத்துளியாய் உன் குரல்!!!!
உயரின்றி பட்ட மரத்தில்
துளிர்விட்ட வேராய் தொட்ட உன் கரம்!!!!!
அக்னி நட்சத்திரத்தால் வாட்டிய கோடை
முத்த மழையில் நனைந்து கொண்டே விலகி நின்றது!!!!!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
