உன் பொல்லாத பார்வையில் எனையிழுத்து சாய்த்தவளே
உன் பொல்லாத பார்வையில் எனையிழுத்து சாய்த்தவளே
*************************************************************************************
வெள்ளிக் கொலுசுமணி நேர்ந்திட்ட கால்களது
துள்ளிக் குதிக்கையிலே ஒலித்திடும் தாளஜதி
கல்வாழை நாபிக்கு குடக்கழுத்து சின்னயிடை
கள்சேர்ந்த காந்தள் உனையார்ந்த மென்விரல்கள்
சிலையொத்த தோள்களிடை அழகூட்டும் கனியகங்கள்
பள்ளம்விழு கன்னங்கள் சேலத்து மாங்கதுப்பு
புள்ளினத்து நாரைபோல் பவளவாய்ச் சிவப்பழகு
முல்லைப்பூச் சரமாக அமைந்திட்ட பல்வரிசை
கள்வடியும் இதழ்களிடை முத்துதிர்க்கும் புன்னகை
எள்ளுப்பூ நாசியொடு நீலவிழி நயனங்கள்
கேள்விக்குறி அதையொத்த சீரான இருசெவிகள்
வில்லார்ந்த புருவத்திடை திலகமிட்ட அழகுநுதல்
கொள்ளும் நேர்வகிடு கார்முகில் கூந்தலிடை
நூல்இட்ட சேலையிலே நீயசைந்து வருகையிலே
பல்லோர் தொட்டிழுக்கும் ஆரூரான் தேர்ஆகி
பொல்லாத பார்வையால் எனையிழுத்து சாய்த்தவளே
கல்லோ உன்மனசு கனிந்துருகக் கூடாதோ ?
அள்ளிவிடும் உன்னழகில் துள்ளிவிழு மென்னைநீ
தள்ளாது ஏற்பாயே பள்ளியெழுச்சி பாடுதற்க்காய் !