கரை வந்து சேர்வாயா
![](https://eluthu.com/images/loading.gif)
அன்றொரு நாள் அலை கடலில் மூழ்கி
அநியாயமாய் எனை விட்டு பிரிந்தாய்
சின்ன சின்ன கோபம் கூட தாங்காமல்
முன்ன பின்ன யோசிக்காமல் மறைந்தாய்
அன்று முதல் இன்று வரை நானும்
நீ வருவாயென தினமும் காத்திருக்கேன்
காணாமல் போன பொருட்கள்
சில சமயம் கிணற்று வாளி நீரோடு
சேர்ந்து வரும் தானே; அது போல
காணாமல் போன நீயும் ஒருநாள்
கரை வந்து சேர்வாயா கண்ணா ?