தூத்துக்குடியில் முத்துக் குளிப்போம்

தூத்துக்குடியில் முத்துக் குளிப்போம்
தூத்த்துக்குடியில் உப்பளம் செய்வோம்
தூத்துக்குடியில் உரம் உற்பத்தி செய்வோம்
தூத்துக்குடியில் கப்பல் ஓட்டினோம்
தூத்துக்குடியை தனி மாவட்டம் ஆக்கினோம்
தூத்துக்குடி வ உ சி கல்லூரியில் கல்வி வளர்ப்போம்
மாத்துக் குறையாத தமிழில் தூத்துக்குடி புகழ் பாடுவோம் !

தூத்துக்குடி தூத்துக்குடி சாத்துக்குடி சாத்துக்குடி நீ
அருந்த அருந்த திகட்டாத சாத்துக்குடி சாறு நீ !

செக்கிழுத்த செம்மல் ஊர்
சில வரலாற்றுக்கு குறிப்புகள் :

செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரம் பிள்ளை
மெத்தப் படித்தவர் ;வழக்குரைஞர் பணி புரிந்தவர் .
சுதந்திர உணர்வால் அடக்குமுறை ஆங்கிலேய அரசிலும்
தென்கடலில் கப்பலோட்டிக் காட்டினான் அந்த வீரத்தமிழன் !
அதற்காக சிறையில் அடைக்கப் பட்டார் ;செக்கிழுத்தார் .
மாடுகள் இழுக்க வேண்டிய செக்கை மனிதர் இழுத்தார் .
இதைக் கேட்டு கொந்தளித்து ஆங்கிலேய ஆட்சியர் ஆஷ் துரையை
மணியாச்சி இரயில் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று
தன்னையும் சுட்டுக் கொண்டு மாண்டான் தியாகி வாஞ்சி நாதன் .
அந்த இரயில் நிலையத்திற்கு வாஞ்சி மணியாச்சி என்று
பெயரிட்டிருக்கிறார்கள் .நன்றே !
இரயில் நிலையங்களின் பெயர்கள் பாரதம் முழுதும் மஞ்சள் பலகையில்
கருப்பு எழுத்துக்களில் எழுதப் பட்டிருக்கும் .
ஆனால் வாஞ்சி மணியாச்சி இரயில் நிலையத்தை கடந்து செல்லும் போது
வாஞ்சி மணியாச்சி என்ற பெயர் செந்நிறத்தில் ஒளிர்வதாக எனக்குத்
தோன்றுகிறது.அது அந்தத் தியாகச் செம்மலின் செங்குருதி வண்ணமல்லவா !

எழுதியவர் : கவின் சாரலன் (4-Nov-18, 9:19 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 26
மேலே