தீபாவளி வாழ்த்துக்கள்

குழந்தைகளின் குதூகலத்தில்
ஒளி வெள்ளம் மின்னலென பட்டாசும்
அவற்றைப் பற்றவைக்கும் போது படபடக்கும் பாங்கும்
ஓடிஒழிக்கும் சிறுவர்களின் குறும்பும் பயமும்
தீபத் திருநாளில் திக்கெட்டும் கொண்டாடும்
ஆரவாரமும் அலங்கார ஒளியின் மோகமும்
என்னவென்று சொல்வது
இன்பத்தில் ஒளி மிதந்து செல்லும்
இன்பத் திருநாளே தீபாவளி

புத்தாடை அணிந்து
பொன்மணிச்சரங்கள் சேர்த்து
கொஞ்சிக் குலாவி உற்றார் உறவினர்
கைகுலுக்கி அன்பு ததும்பிட
ஆனந்தமாய் மகிழ்ச்சியை
அள்ளிக் கொண்டாடும்
அற்புதத் திருநாளே இவ்வின்பத் தீபாவளி
வாழ்த்துவோம் அனைவரையும் .
இனிய தீபாவளியில் இன்புற்று வாழ .

எழுதியவர் : பாத்திமாமலர் (6-Nov-18, 1:05 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 49

மேலே