அது ஒரு இளங்காலை நேரம்

அது ஒரு இளங்காலை நேரம்
வீதியில் நடக்கும்போது
நில் என்றேன் நின்றாள் திரும்பினாள்
ஓ இது அவளில்லையே......... !!!
நான் அழகில்லையோ எனக்கெழுதக் கூடாதோ
என்பது போல் பார்த்தாள் !

கையில் பிடித்திருப்பது விளக்குமாறு
கண்களில் அசைவதோ வானத்து நிலவு
புன்னகையுடன் பெருக்கி நீ கையிலெடுத்தால்
குப்பைகளுக்கும் கிடைக்குதடி புதுவாழ்வு !

கொல்லென்று சிரித்தாள்
அந்த விளக்குமாத்துக் கைக்காரி !

எழுதியவர் : கவின் சாரலன் (7-Nov-18, 8:21 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 87

மேலே