ஒரு தாயின் அழுகை
கருவறையில் அரும்பி
பத்து மாதம் கருவறையில்
வளர்ந்தாய், அதன் பின்னே
உன்னை பெற்றேடுத்தேன் மகனே
வளர்த்தேன் அன்பெல்லாம் தந்து
ஆளாக்கினேன் உலகில்
தனிமனிதனாய் இயங்கும் நீ
இப்போது நான் தாய்
என்பதையும் ஏன் மறந்தாயோ
இப்படி வீட்டில் ஓர் இருட்டறையில்
அடைத்துவிட்டாய்
கருவறை என்னும் இருட்டறையில்
என்னை சுமந்தாயே ஏன் என்பதுபோல்...