பேராசைப் படாமல் இருங்கள்

பேராசைப்படாமல் இருங்கள் !
கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

ஆசை என்பது அழகிய குதிரை
பேராசை கொள்ளும் மனம்
கடிவாளமில்லாக் குதிரை
ஒவ்வொரு ஆசை படிப்படியாக
வெவ்வேறாக நிறைவேற
மனம் எதிலும் பேராசைப்படும் !

ஆசை பேராசையானால்
ஆபத்துகள் துளிர்விடும்
அவமானங்கள் வட்டமிடும்
பண்புகள் மறைந்து விடும்
பொய் கட்டிப்பிடித்து களிக்கும்
வெட்கம் ஓடிவிடும் !

வாழ்வில்
பொன்னாசை பொருளாசை
மண்ணாசை பெண்ணாசை
அளவோடு இருந்தால் நிம்மதி
பேராசையோடு கைகோர்த்தால்
வாழ்வில் படவேண்டும் அவதி !

பூ.சுப்ரமணியன்
வன்னியம்பட்டி ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம்

எழுதியவர் : பொன்விலங்கு பூ.சுப்ரமணிய (7-Nov-18, 7:54 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 116

மேலே