உறவைக் காத்திடுவோம்

உரிமைக்குப் போர் இடுவோம் /
உரிமையுள்ளோரிடம் மோதிடுவோம் /
கோபத்தைக் கொன்றிடுவோம் /
உள்ளத்தை வென்றிடுவோம் /

அன்பை அபகரித்து விடுவோம் /
அதற்காகவே நச்சரித்து விடுவோம் /
அடுத்தடுத்து நெருந்தியாய் நெரித்திடுவோம் /
ஆனாலும் விருப்போடு உரைத்திடுவோம் /

உறவைக் காத்திடுவோம் /
உறவு நீடிப்பதற்காகவே
உதறுவதாய் நடித்திடுவோம் /
உறுமியே கர்ச்சிப்போம் /
உண்மையிலே அதை ரசிப்போம் /

நல்லோரை நினைத்திடுவோம் /
நழுவி விடாமல் இறுக்கப் பிடித்திடுவோம் /
நல்லவைக்காக நடித்திருப்போம் /
நடிப்பிலே நமது தேவையை முடித்திடுவோம் /

அறிந்தவரிடம் வம்பு இழுத்திடுவோம் /
அதையே இன்பமாய் நினைத்திடுவோம் /
அழகான உறவை ஆதரிப்போம் /
அதற்காக அவரை அலக்கழிப்போம் /

அதனால் உள்ளம் வருந்திடுவோம் /
அதற்கான மருந்தை இன்பத்தால் தடவிடுவோம் /
உண்மை நேசம் பரப்பிடுவோம் /
உற்ற உறவை திருத்திடுவோம் /

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (9-Nov-18, 8:39 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 57
மேலே