கைப்பேசி

ஒரு விடுமுறை நாளில்
என் கைப்பேசி
தொலைந்து போனது
வேண்டாத அழைப்புகள்
வேண்டாத தகவல்கள் என
எதையும் தவிர்த்ததில்லை
எப்போதும்
கைப்பேசியுடனே நான்
என்னதான் அதில் உள்ளதோ
அடிக்கடி திட்டு வாங்கினாலும்
என் கரங்களில்
உறவாடியபடி கைப்பேசி
உறவினர் வருகை தரும்
நேரங்களில் ஒன்றிரண்டு
வார்த்தை அளவளாவி
அறைக்குள் முடங்கியபடி
நானும்,கைப்பேசியும்
இப்போது
என் கைப்பேசி
எங்கோ எவர் கரங்களிலோ
தொலைந்து போன
என் கைப்பேசியை
பார்த்தீர்களா
என்று கேட்டவகையில்
உறவுகளிடம்
பல வருடங்களுக்கு பிறகு
பேசும் வாய்ப்பு கிடைத்தது
என் கைப்பேசியை
எடுத்த புண்ணியவான்
என் அழைப்பை தவிர்க்க
அதை சுவிட்ச் ஆஃப்செய்து
வைத்துவிட்டார்
ஆனாலும் என் கைப்பேசியை
தொடர்ந்து தேடியபடி நான்!!!!!

எழுதியவர் : உமாபாரதி (9-Nov-18, 11:00 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
Tanglish : kaippesi
பார்வை : 144

மேலே