போரும், அமைதியும்

பனிமூடிய மலைத்தொடர்கள்
பசுமைப்போர்த்திய புல்வெளிகள்
தங்க வயல்கள்,பழத்தோட்டங்கள்
பூஞ்சோலைகள் ,ஓடும் நதிகள்
ஆடிவரும் அருவிகள் ,அங்கு
பாடிவரும் பறவைக்கூட்டங்கள் -என்று
இயற்கை எழிலெல்லாம் பொங்கும்
அழகு நகரம் அது , அழகிய பள்ளத்தாக்கில்

இன்று யுத்த பூமியானது .............
மாறுபட்ட கொள்கைகள்கொண்ட இருபாலர்
ஆட்சியைக் கைப்பற்ற நடத்தும் போரில்
அமைதி அழகு எல்லாம் இழந்து
அந்நகரம் ஓர் மயான பூமி காட்சி தந்தது
தெருவெல்லாம் துப்பாக்கிச்சூட்டின் அலறல்
துறக்கப்பட்ட வீடுகள்..... அழிந்த கட்டிடங்கள்
ஏதோ சில வீடுகளில் ...வீட்டிற்குள் அடைபட்டிருக்கும்
பெரியோர், தாய்மார்கள், சிசுக்கள்...
விளக்குகூட ஏற்றது, இருட்டில் வாழ்க்கை
மூச்சிவிடக் கூட பயந்த வாழ்க்கை..
தெரு நாய்கள் கூட ஓடி ஒளிந்துகொண்டன
எங்கும் மயான அமைதி.....

இன்று ஏதோ ஓர் பண்டிகை நாள் அங்கு
போரிடுவோர்க்குள் ஓர் ஒப்பந்தம்
மூன்று நாட்கள் போருக்கு ஓய்வு....வெள்ளைக்கொடி
தெருவெல்லாம் அதுவரை...

திடீரென, தெருவெல்லாம் ஒளிபெற்று
மக்கள் கூட்டம் .....குடிநீர்,உணவு பண்டங்கள்
பால் வாங்கி சேர்க்க மக்கள் தெருவில்
படித்துக்கொண்டிருக்கும் மாணவன் நானும்
வெளியில் வந்தேன் பயம் தெளிந்து

வீட்டு வாசல் எதிரில் இருந்த பூந்தோட்டம்
என் கண்களுக்கு முதல் விருந்து

போர் ஒரு பக்கம், அதனால் ஏற்படும்
சேதங்கள், உயிர்சேதங்கள் ஒரு பக்கம்
இவற்றைத்தாண்டி எது ஒரு உணற்சி
என் மனதிற்குள் சிரிக்கிறது, பாடுகிறது
இந்த பூந்தோட்டம் பார்த்த பின்னர்
அங்கு மலரும் பூக்கள் கண்ட பின்னர்
வித விதமான வண்ணப்பூக்கள் ,அவற்றின் மேல்
போர்பற்றிய சிந்தனைகள் ஏதும் இல்லா
வலம்வரும் வண்ணத்துபூச்சிகூட்டம்,
தேன் உன்ன வரும் வண்டுகள் கூட்டம்

இம்மலர்கள் அறியாது
இங்கு நடக்கும் வன்மம், போர், பகைமை
இரக்கமின்மை, கொடூரமான கற்பழிப்பு,
தீவைப்பு இன்னும் சொல்லொணா கொடூரங்கள்; பூக்கள்,
அவை என்றும் போல் பூத்துக்குலுங்குகின்றன ..

இதோ என் பிரியமான சிவப்பு ரோசாப்பூ,
'அன்பை நாடு மனிதா' என்கிறதோ

அதோ அந்த அற்புத நீலநிற காக்கட்டான் பூ
'மனதில் உறுதிக்கொள்' என்கிறதோ
'வீரம் கொள்' வெற்றிநடைபோடு என்கிறதோ...

அதோ அந்த தடாகத்து தாமரைப்பூ
நீருக்குமேல் தலைத்தூக்கி மலர்ந்திருக்க
அதன் இலைகள், தண்ணீரால் நனையாது தனித்திருக்க
இந்த போரின் தாக்கம் எனக்கேதுமில்லை என்கிறதோ
'கடவுளை நம்பு, தீர்ந்திடும் அல்லகள் ' என்கிறதோ..nandhavanapookkal

இந்த நந்தவனப்பூக்கள் ...
என் மனதை போரின் தாக்கத்திலிருந்து
விடுத்தன .............

எங்கும் எப்போதும் துயரத்தின் இடையே
ஏதோ ஓர் இன்பமும் ஊடுருவி நிற்கும்
அதை நீ கண்டுகொண்டால் இந்த
யுத்தங்கள், அதன் தாக்கங்கள் இவை
அனைத்தும் பறந்துபோகும் மனதைவிட்டு
அதோ பறந்து போகிறதே பச்சைக்கிளி
அந்த பழத்தோட்டத்து ஆப்பிள் மரத்தை விட்டு...
அப்படி....

அழிவுக்கு மருந்தும் இயற்கையிலே
கண்டுகொள்வோம், சாந்தி பெறுவோம்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Nov-18, 8:02 pm)
பார்வை : 210

மேலே