நிகழ்த்தகவானவை…
வாய்ப்பும் வயதும் நிகழ்த்தகவானவை
கிடைக்கும் போது இயலாமல் போகலாம்
வாழ்க்கையும் தேவையும் நிகழ்த்தகவானவை
முடிவின் போது முன்னே நிற்கலாம்
எல்லாம் எப்போதும் இங்கேதான்
முயலாதவருக்கு எல்லாம் கானலாக!
முயற்சியை என்றும் அயற்சிபண்ணாமல்
தளர்ச்சி இன்றி பயிற்சி செய்தால்
புகழிச்சியோடு பூத்து குலுங்கலாம்....
- நன்னாடன்