வீட்டில் உண்டு நல் நெறி

அன்பு நிறைந்த வீடு
ஊக்கம் கொடுக்கும் பாரு /
துன்பம் துறந்த வாழ்வு
முயற்சியைப் பெருக்கும் பாரு /

நல்லினக்கத்தைக் கூறும் வீடு
நல்லோரை மதிக்கும் பிள்ளை பாரு /
பங்கிட்டு உண்ணக் கற்றுக் கொடுக்கும் வீடு /
எங்கும் அதனைத் தொடரும் பாரு /

பழங் கதை உலாவும் வீடு
பண்பாட்டைக் காக்கும் பாரு /
பல வகைக் குணம் கொண்டோர் வீடு
மன உளச்சலோடு வாழ்வதைப் பாரு /

மக்களைப் போற்றும் வீடு
மனசுக்கு மருத்துவமாய் மாறும் பாரு /
எளியோரை ஏழைகளை வரவேற்கும் வீடு
வீழ்ச்சி இன்றி எழில்சியோடு மேல் ஓங்கும் பாரு /

உன் வேகம் குண்றாதே என்னும்
தாரகை மந்திரம் ஒலிக்கும் வீடு /
உதாரணப் பொருளாய் நாவில்
உலாவும் பாரு /

உழைத்து உண்ணும் வீடு
உழைப்பின் பெருமைக் கூறும் பாரு /
நிலை உயரும் போதும்
சீர்நெறியோடு வாழும் வீடு
நிலமை தடுமாறிய பின்னும்
நிலையான நற்பெயரோடு வாழும் பாரு /

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (15-Nov-18, 2:27 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 99

மேலே