அழகுற அவளும் மெழுகுற தமிழும்

காற்றும் உன் காலடிக்கு ஏங்கி நிற்கிறது
உன் பாதம் பட்டு அவை புனிதமடைய...

கற்றாலையின் மேல் வீழ்ந்த காகிதம் போல்
என்னுயிர் என் நாலறை இருதயத்தை இருக்கப் பிடித்துக் கொள்கிறது,
நீ பொட்டிடும் அழகைக் காண...

கண்ணாடிக்கு உரமளித்த உன் கண்கள்,
என் நெஞ்சில் வந்து இளைப்பாரதா?
என் மனதில் வந்து குடில் கொல்லாதா?
உனைக் காண மட்டுமே பிறந்த என் கண்களுக்கு வரமளிக்காதா?
கூறடி நேற்று பூத்த வெண்ணிலவே...


கடலலையையும் கண்டு குதிக்காத எனது உள்ளம் உனைக் கண்ட பின்பு,
தத்தித் தாவிக் கொண்டாடுகிறது அதை ஒரு பண்டிகை என்று...

அவளை காண அங்கும் இங்கும் கண்கள் அலையும் வேலையில் கண்ணுக்கு தென்பட்டது,
என் இரன்டாம் வகுப்பு தமிழ் புத்தகம்

கையில் எடுத்தேன்
மடங்கிய அட்டை அழகு
புரட்டி பார்த்தேன்
பழைய புத்தக வாடை அழகு
நோக்கம் இட்டேன்
பென்சில் வரைந்த சித்திரம் அழகு
ஒவியம் கண்டேன்
உந்தன் ஞாபகம் தந்தது அழகு
உன்னை நினைத்தேன்
உன்னை விட என் செந்தமிழ் அழகு

எழுதியவர் : கா.மணிகண்டன் (15-Nov-18, 3:12 pm)
சேர்த்தது : மணி ராக்ஸ்
பார்வை : 136

மேலே