தாவுகிறது மனது

ஆசை ஆசையாய்
அள்ளி அணைத்து
தங்கநிற மேனியில்
தாவுகிறது மனது_ நீ
வளர்ந்து ஆளாகி
வளைந்து குனிந்து
வெட்கி நிற்கின்றாய்
வெள்ளந்தி பெண்ணாய்
நாணம் அழகுதான் நீ
நாள்தோறும் நாங்கள்
வணங்கும் தாயல்லவா
நெஞ்சை நிமிர்த்தி நில்
பாசத்தை காட்டாதே
பாழாக்கி விடுவார்கள்
வளர்த்துவிட்ட தாயை
வாஞ்சையுடன் அணைக்காமல்
வஞ்சித்து விடுவார்கள்
முற்றிய மணிகொண்டு
சேமமுற தேசத்தை காத்திடு!!!

எழுதியவர் : உமாபாரதி (21-Nov-18, 5:16 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
பார்வை : 159

மேலே