மாற்றம்

========
“கடன் அன்பை முறிக்கும்’’
என்ற வாசகப் பலகைபோட்டுத்
தேடிய பணத்தை
மாப்பிள்ளை என்ற கடன்காரனுக்கு
தாரை வார்த்துக் கொடுக்கும்
அப்பாக்களால்
அன்பு கடனை முறிக்கும் என்று
மாற்றி எழுதப்பட்டும் விடுகிறது
**மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (22-Nov-18, 2:35 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : maatram
பார்வை : 323

மேலே