கஜா -1

ஆழக்குழியொன்று வெட்டி அதிலேயொரு முட்டையிட்டு
அன்னாந்து பார்த்தால் தொன்நூறு முட்டை….
முதலில் மெல்ல ஆரம்பித்தது.. மெல்ல அதிகரித்து
பின்னடித்த காற்று பலமாக … கத்தியது… வளைந்தது…
பின் ஒவ்வொன்றாய்… இல்லை இல்லை.. பல கொத்துகளாய்…
சிதறிவிழுந்த நூற்றாங்குச்சிகளாய்…
அங்கொன்றும்… இங்கொன்றுமாய்….
பின் அவற்றோடே, அக்கா வைத்த மாமரம்…
தாத்தா ஒன்றுக்கடிக்கும் பலாமரம்…
முனியோட்டம் புளியமரம்…
பின் வேம்பு…
அதன் மீது ரோஸ்வுட், … கொஞ்சம் கழித்து…
தேக்கு அதன் தொடர்சியாய் …
இன்ன பிற மரங்கள்…
அம்மாச்சி வைத்த மருதானிச்செடி உட்பட…
காலையில் விடிந்ததும்
அடித்த போனில்
நீ நல்லாயிருக்கல்ல அது போதும் என்றவன்
கேட்கவேயில்லை அவன் வைத்த நெல்லி மரம் பற்றி
என்பது இன்னமும் வருத்தமாயிருந்தது….

-ரிஷி சேது.

எழுதியவர் : ரிஷி சேது (23-Nov-18, 5:56 am)
சேர்த்தது : ரிஷி சேது
பார்வை : 122

மேலே