எதற்காக வித்திடப்படுகிறது

குரங்குகள் இரண்டு கொடூரப்பார்வையோடு
மலரை நோக்கி சென்று
பறித்து கசக்கி எறிந்து
பூந்தோட்டத்தையே நாசம் செய்தாற் போல
காமுகர்களின் கொடூரத்தனங்களை அதிகரித்து கொண்டே வருவதால் சமுதாயம் என்னும் பூந்தோட்டம் சூரையாடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

குற்றமென்று தெரியாமல் யாரும் செய்யவில்லை,
பிறருக்குத் தெரியாத வரை எதுவும் குற்றமில்லை என்று நினைத்து தெரிந்தே செய்வோர் அதிகம்.

ஆதாயம் தேடி நாடுவார்,
கடவுளிடம் கூட ஆதாயம் வேண்டியே பக்தி கொள்வார்.
புத்தியங்கு இல்லை,
தன் சக்தி குறைந்து சடுதியில் அழிவாரே.
இந்தக் கூடு எப்போது வேண்டுமானாலும் சிதையலாம்.
நிரந்தரமேது?
வாழும் கொஞ்சக்காலத்தில் பிறர் மனமும், உடலும் சிதையாத வண்ணமே வாழ்ந்துவிட்டு போனாலென்ன?

உன்னத எண்ணம் கொண்டோர் உலகில் குறைவு, உதவுவோர் கூட சுயநலமாக படம்பிடித்து விளம்பரம் செய்வாரே.
தன்னைத் தானே புகழ்வாரே.
விளம்பரமில்லா அன்பிற்கு மதிப்பில்லை என்று ஓரங்கட்டும் உலகம் எனக்கொரு சவால் தான்.
இணைய உலகில் சகஜமாக பேசுவதாய் பண்பற்ற பேச்சுகளும்,
தன்னிலையில் நடுநிலை அடையாத கருத்து மேலும் மனித சமுதாயம் வீழ்ச்சியுறவே வித்திடுகிறதே...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (23-Nov-18, 5:43 pm)
பார்வை : 666

மேலே