ஒடுக்கப்பட்ட இனம்
ஒடுக்கப்பட்ட இனம்
===================
மண்ணோரம் தமிழ் பேசி வாழ்ந்தோரும்
மனமொத்து வீசிய
தமிழ் காற்றும்
வறுமை கொண்டு தாழ்ந்து நிற்க
ஒடுக்கப்பட்ட இனம் கனவுகளை தொலைத்து
ஒடுங்கி தானாக புலம்பி அழுகிறது
சுதந்திரமாக முகத்தை காட்டும் சூரியனாய்
சுற்றம் சூழ வலம்வர வழிசெய்வாய
வையகம் போற்றிடும் கருணை இறைவனே
வாழ்வும் சிறப்பது இனத்தின் சிரிப்பில்தானே
வளமான வாழ்வை கொண்ட இனமே
நிழல் இல்லாத பாலைவனம் ஆனதே
நீளும் பொழுதெல்லாம் நிம்மதியை தொலைக்கிறதே
நீண்டும் போனதால் பாதைதான் மூடிபோகிறதே
கேள்வியில்லாத வாழ்வும் உரிமையில்லாத வாழ்வும்
வேள்விக்குள் சிக்கி உயிரிழந்து போகும்
விதி இதுவென நம்பும் மக்களும்
விடிவின்றி ஐயத்தை தழுவி கொள்ளவும்
மரணத்தை தழுவி கொள்ளும் எண்ணங்கள்
மனதை வெறுப்படைய வைத்து கொல்ல
ஒடுக்கப்பட்ட இனமும் கலங்கி நிற்கிறதே