அன்றைய கிராமத்து விடியல்

அன்றைய கிராமத்து விடியல்
பச்சை புல்லின் நுனியில்
ஒட்டி உற்வாடும் ஒற்றை
துளிகள் !
விடியலை சொல்லி உலகை
எழுப்பும் சிட்டு குருவிகள்
நானே எழுப்புவேன் சூரியனை
நினைத்து தொண்டை வலிக்க
கூவிடும் சேவல்கள் !
இரையை தேடி விடியலில்
கிளம்பும் மந்தை கூட்டங்கள்
ஒழுங்காய் செல்ல ஒலிக்கும்
ஹோய் ஹோய் குரல்கள்
பள்ளி செல்லுமுன் பூவை
பறித்து காசை பார்க்க
விரைந்திடும் உள்ளூர் சிறுவர்கள்
அதை மொத்தமாய் வைத்து
நகருக்கு அனுப்ப துடித்திடும்
மலர் சாகுபடி விவசாயிகள் !
வயலும், தென்னையும்
வாழையில், களை பறித்திட
நடந்திடும் பெண்கள்
எல்லா கடமையும் முடித்து
திண்ணையில் அமரும் முதியவர்கள்.
எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்து
சோம்பலில் சுருண்டு தெருவில்
படுக்கும் தெரு நாய் கூட்டங்கள்

இதுதான் அன்றைய
கிராமத்தின் விடியல்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (26-Nov-18, 10:57 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 149

மேலே