பாரதியார்
பாரதி
இவன் பூணூலை
விடுத்து பா நூலை அணிந்தவன்
பிராமணனாய்ப் பிறந்து பிறர் மனங்களை
அறிந்தவன்
இந்த சுப்பிரமணி
அடித்த மணிதான்
அறியாமை இருளில்
மூழ்கிக்கிடந்தோரை எழுப்பியது
ஜாதி இல்லை எனக் குரல் எழுப்பியது
பா வை ரதிபோல் அழகாய்
படைத்தது யார்
அவர்தான் பாரதியார்
இவன் பாரதி
எனும் பா நதி
பாரதத்தில் பா ரதம்
ஒட்டிய சாரதி பாரதி
அனைத்து கவிஞர்களும்
மண்ணில் மக்கிப் போக
இவன் மட்டும் மக்காக் கவியானான் மக்கள் கவியானான்
மகாகவியானான்
இவன் கலைவாணியின்
கைநழுவி மண்ணில்
விழுந்த வீணை
இவனின் மோனை
அச்சமில்லை என்றது வானை
இது தெரியாது
இவனை மிதித்தது யானை
இவன் கவி புனையும்
சுந்தரன் வேதம் ஓதாத மந்திரன்
ரஜினிக்கு முன் பிறந்த எந்திரன்
பகைவரை பார்வையால்
வீழ்த்தும் மின்திறன்
சாட்டையடி கொடுக்கும்
இவன் பண் திறன்
இவன் மூடர்களை தன் எழுத்தாணி கொண்டு கவிதைச் சிலுவையில்
அறைந்தவன்
இவன் மெய்யில் அணிந்தது
கருப்புச்சட்டை
மையில் அணிந்தது
நெருப்புப் பாட்டை
கையில் அணிந்தது
கவிதைச் சாட்டை
சமூகத்தில் இவனின் ஆமை
புகுந்துதான் அறியாமை
கல்லாமை கணவன் இறந்ததும்
பெண்ணைக் கொல்லாமை
குலத்தாழ்ச்சி சொல்லாமை
ஆங்கிலேயன் ஆணவம் கொள்ளாமை
பெண்ணுரிமை பேணாமை
அனைத்தையும் விரட்டியது
அந்த ஆமைதான்
இவன் பேனா மை
புதுவைக் குமார்