கண்ணில் தெரியுதொரு தோற்றம்

அப்பாழ்பட்ட வேனல் உன்
முதிர்ந்த வெட்கத்தில்
குளிர் காய்ந்த பொழுதில்...

பொடிபட்ட ஸ்வர்க்கங்கள்
ஆகாயத்தின் இடையில்
விண்மீனாய் மிளிர்ந்தன.

கற்கால மரமொன்றாய்
விழுது பரப்பி நிற்கிறேன்.

பக்ஷிகள் இசைக்கிறது உன்
பூபாளத்தில் தேன் படிந்த
கவிதையின் ராகங்களை.

எந்தக்கவிதையிலோ
தொலைந்த என்னிடம்
காட்டும் வழிகளெல்லாம்...

உன் சேலையின் பூக்கள்
என்னையே ஸ்வீகரித்தன.

பொல்லாத புன்முறுவல்
வனவாசனையாய்...
மழையின் நரம்புகளில் படர

ஈரங்களில் சிலிர்த்தது
நம் கண்களின் காதல்.

எழுதியவர் : ஸ்பரிசன் (30-Nov-18, 7:01 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 79

மேலே