கல்யாண சாப்பாடு

ராமு : என்னடா சோமு, கையில கல்யாண பையும்
வாயெல்லாம் சிரிப்பாய் வந்துண்டிருக்க
என்ன விஷயம் , எனக்கும்தான் கொஞ்சம் சொல்லேன்.

சோமு : ஐயா , உங்ககிட்ட சொல்ல கொஞ்சம் வெட்கமுங்க
அது வேற ஒன்னும் இல்லீங்க, என் மச்சான் ரகு அவன்
பொண்ணு கல்யாணமுங்க.... அதுக்கு போனேனா
அங்க பாருங்க, பையன் வீட்டுல கல்யாணத்துக்கு வந்தவங்க
ஆதார் கார்டு எடுத்துட்டு வரணும்னு சொல்லி இருக்காங்க
ஏன்னு கேட்ட , அப்பத்தான் மோய் எழுதினவங்கள பயோமெட்ரிக்
ஸிஸ்டெம்ல அக்கௌன்ட் பண்ணி, ஓ.டீ.பி கிடைச்சாப்பாடு
'கல்யாண சாப்பாடு' டோக்கன் கொடுத்தாங்க....
நானும் அப்படித்தான் மோய் எழுதிட்டு , ஆதார் கார்டு காட்டி
ஓ.டீ.பி நம்பர் காட்டி, அது என்னம்மோ புரியலீங்க...
ஒரு வழியா சாப்பிட்டு வந்தேனுங்க, வெத்தலைப்பையோடு...
அதை நெனெச்சுட்டே வந்தேனா சிரிப்பு வந்துதுங்க...

இந்த ஆதார் கார்டு, கம்ப்யூட்டர் உலகம் நெனெச்சு சிரிப்பு
பொங்கிட்டு வருதுங்க ..................

ராமு : அட க்ரிஹசாராமே .......... இப்படியும் ஒரு மொய் எழுதுதல்
கல்யாண சாப்பாடு தொடர்பா..............போதுமடா சாமி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (1-Dec-18, 6:52 pm)
Tanglish : kalyaana sappadu
பார்வை : 112

மேலே