பிழையின்றி தமிழ் பயிலலாம் பாகம் 5,6
பாகம் 6
குறில் எ ஓசைச் சொற்கள்
இந்த குறில் எ ஓசைச் சொற்களுக்கு முன்பாக ஒற்றைக் கொம்பு மட்டும் இட்டு படிக்க வேண்டும்.
சில எடுத்துக்காட்டுகள்.
தென்னை, தெய்வம், செம்மண், வெற்றி, வெல்லம்(இனிப்பு), வெள்ளம்(நீர்ப்பெருக்கு), செடி, பெருமை, கெட்டிக்காரன், செல்வன்......
இதில் தென்னை என்ற சொல்லில் முதலில் உள்ள த என்ற எழுத்திற்கு முன்பாகப் போடப்பட்டுள்ள ஒரு குறியீடே ஒற்றைக் கொம்பு எனப்படும்.
இனி இதற்கானப் பயிற்சி: 1
பின்வரும் பத்தியில் பயின்றுள்ள குறில் எ ஓசை சொற்களை அடையாளம் கண்டு எழுதவும்.
செக்கோவ் தான் முதலில் எழுதிய கதைகளைப் பணத்துக்காகவே எழுதினார். ஆனால், அவரது கலைப்படைப்பு ஈர்ப்பு அதிகரித்தபோது, தற்காலச் சிறுகதை வளர்ச்சியில் பின்னர் செல்வாக்கு ஏற்படுத்திய பல புதுமைகளை அவர் தனது கதைகளில் அன்று புகுத்தினார்
பயிற்சி: 2
உனக்குத் தெரிந்த குறில் எ ஓசை சொற்கள் ஐந்தனை எழுதி அதற்கேற்ப படத்தை வரைந்து வண்ணம் தீட்டுக.
பாகம் 7
குறில் ஒ ஓசைச் சொற்கள்:
குறில் ஒ ஓசைக்கு, ஒற்றைக் கொம்பும், துணைக்காலும் இடவேண்டும்.
சில எடுத்துக் காட்டுகள்:
தொழில், பொன், தொப்பி, கொசு, கொலுசு, பொருள், பொங்கல், கொண்டை, கொள்கை, சொர்க்கம், சொந்தம், தொன்மை……..
இனி பயிற்சியைப் பார்க்கலாம்.
1. பின்வரும் பத்தியில் குறில் ஒ ஓசை எழுத்துகளைச் சுற்றி கட்டமிடுக. பின்னர் அந்த சொற்களை உரிய முறையில் உச்ரித்துக் கொண்டே எழுதுக.
தஞ்சாவூரில் உருவாக்கப் பெற்ற செயற்கை அலங்காரப் பொருளாகும். இந்த வட்டமான தட்டு பரிசுப் பொருளாக உருவாக்கப்படுகிறது. இக் கைவினைத்திறன் வெள்ளி, பித்தளை, செம்பு போன்ற உலோகங்களினால், நடுவில் கடவுள்கள் அல்லது தேவர்களின் உருவங்களுடன் புடைப்புரு சித்திர வேலைப்பாடுகளுடன் செதுக்கப்படுகிறது. இக் கலை வேலைப்பாடு அறிவுசார் சொத்துரிமைகளின் வணிகம் தொடர்பான அம்சங்கள் குறித்த ஒப்பந்தத்தின் புவியியல் சார்ந்த குறியீடு பாதுகாப்பின் கீழ்ப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இந்திய அரசாங்கத்தின் புவியியல் சார்ந்த குறியீடு சட்டம் 1999 இல் "தஞ்சாவூர் ஓவியத்தட்டு" (Thanjavur Art Plate) என 63 வது பொருளாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.[1][2] தஞ்சாவூர் வீணையைப் போலவே தஞ்சாவூர் கலைத்தட்டும் தஞ்சாவூரின் பெருமையை உணர்த்துகிறது.
பயிற்சி 2
உனக்குத் தெரிந்த ஐந்து குறில் ஒ ஓசைச் சொற்களை எழுதியும், அதற்கேற்ப படம் வரைந்து, வண்ணம் தீட்டி, அதனை ஏதேனும் ஒரு நாளிதளில் பிரசுரிக்க அனுப்பவும்.
அடுத்துவரும் பாடத்தில் நாம் நெடில் ஓசைச் சொற்களையும், எழுதும் முறைகளையும், அதற்கான விளக்கங்களையும் காணலாம்.
அன்புடன்,
ஸ்ரீ. விஜயலக்ஷ்மி,
தமிழாசிரியை, கோவை.