காதல்

அழகிய வீணை அது
வெறும் அலங்கார இசைக்கருவி
அதன் நரம்பாம் தந்திகளை
சுருதி சேர்த்து மீட்டினால் மட்டுமே
நல்வீணை தந்திடும் இன்னிசை

என்னவனே உன்னவள் நான்
உனக்காகவே காத்திருக்கிறேன் தவமிருந்து
இன்னும் நீ என்னைக் கண்டுகொள்ளவில்லை என்றால்
இசைக்கா வீணைபோல் அல்லவா வீணாகிவிடுவேன் நான்
இன்னும் ஏன் தாமதம் என்னவனே
வந்திடுவாய் என்னை அள்ளிக்கொண்டு
காதல் இன்பம் தந்திடுவாய் அந்த இன்ப சுகத்தில்
தொட்டால் மலரும் பூப்போல் நான் மலர
உந்தன் ஸ்பரிசத்தில் இசைத்தரும் வீணைபோல்
நானும் காதல் கீதம் பாடுவேனே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-Dec-18, 3:23 pm)
Tanglish : kaadhal
பார்வை : 235

மேலே