மீண்டும் ஒரு மரணத்தில்
ஆடை மாற்றியதோ?
மரம்
சுற்றிலும் உதிர்ந்து
போன நாங்கள்
ஆதங்கத்தோடு ஒரு
சிலது மட்டும்
மரத்தையே அண்ணாந்து
பார்த்தபடி
சுற்றி சுற்றி வலம்
வந்தது
மீண்டும் ஒரு வாய்ப்பு
கிடைக்கும்
என்ற எதிர்பார்ப்போ?
பச்சைப் புத்தாடை
உடுத்தி
எங்களை கழற்றிவிட்ட
சந்தோசத்தில்
கர்வத்தோடு நிற்க
ஏன் இந்த நிலை
என்று யோசித்தபடி
மீண்டும் ஒருமுறை
என்னையே பார்க்க
அப்பொழுது தான்
கவனித்தேன்
நான் எதற்கு உனை
பார்க்க என்ற
கர்வத்தோடு கவிழ்ந்தபடி
ஒரு சிலது
மட்டும் என்னருகில்
இது ஏன் எனக்கு
உரைக்காமல்
போனதென்று
அப்பொழுதுதான்
எனக்கு உரைத்தது
மெல்லிய ஒரு
உந்துதல்
யாரென்று பார்க்க
காற்று வந்து
கலைந்து போக
கட்டளையிட சிறு
முணு முணுப்போடு
நாங்கள் கலைய
காற்றது தன்கட்டுக்குள்
கொண்டுவந்த
களிப்போடு எங்களை
அங்கும் இங்கும்
அலைகழித்தது இனி
இதுதான்
விதியென்றே புரிய
காற்றிடம் சரணடைந்து
மீண்டும் ஒரு மரணத்தில்
மண்ணோடு கலந்திட
நாங்களும் பெயரை
மாற்றிக் கொண்டோம்
சருகுகள் என்றே