பூக்காரியின் முல்லைச் சிரிப்பினில்
பூக்காரியின் முல்லைச் சிரிப்பினில்
பூக்களும் வெட்க முற்றன கூடையில்
மெல்லிய விரல்களால் அவள் தொடுத்த போது
அந்த மென்மைத் தொடலில் மீண்டும் மகிழ்ந்து சிரித்தன
சரத்தை சாயந்திர வேளையில் வந்த
இன்னொரு புன்னகைக்காரிக்கு விற்றபோது
நன்றி நவின்று பிரியா விடை பெற்றன பூக்கள் !