தமிழின் சிறப்பு
இவ்வுலகின் அழகினை காண வைத்த என் தாயின் அழகே சிறந்தது என்று நினைத்திருந்தேன். பின் அவள் உரைத்த மொழியின் இனிமையை கேட்கும் போது, தாயின் அழகினை விட என் தாய் மொழியாகிய தமிழின் அழகே சிறந்தது என உணர்ந்தேன். என் தாயின் அழகு என் ஒரு கண் என்றால் , அவள் உரைத்த என் தாய் மொழியாகிய தமிழே என் மற்றொரு கண்.
கண்கள் இரண்டு என்றாலும் பார்வை ஒன்றுதானே!
என் தாய் என் உடல் என்றால்,
என் தாய் மொழியாகிய தமிழே என் ஆன்மா. உடலை விட்டு ஆன்மா வாழும் அல்லவா! அதுபோலத்தான் இவ்வுலகில் அழகு என நினைத்திருக்கும் எவை அழிந்தாலும் என் ஆன்மாவாகிய தமிழ் என்றும் நிலைத்திருக்கும்.