அயல்நாடு

கதவு
திறந்தது
காற்று
விரிந்தது
சுவாசம்
நிறைந்தது
முகமும்
மலர்ந்தது
அமைதி
இறந்தது
அணைப்பு
தளிர்ந்தது
கண்ணீர்
கரைந்தது
புன்னகை
சூழ்ந்தது
உறவு
பிணைந்தது
ஆண்டு
உதிர்ந்தது
அயல்நாடு
கலைந்தது
மண்வாசனை
நுழைந்தது
கடவுச்சீட்டு
எரிந்தது
நன்றி
உமிழ்ந்தது
இல்லறம்
செழிந்தது
அன்பு
வளர்ந்தது
ஆயுள்வரை
காத்திருந்தது.........