முத்தம் -
செவ்வான நிறம்பிரித்து
செம்பருத்தி அதில்குழைத்து
செந்நீரோட்டம் சிறிதளித்து
செய்தவண்ண உஞ்செவ்விதழில்
ஓடுதடி என்னுயிரோட்டம்...
இதழை இதழ் கவ்விக்கொண்டு
இதயம்வரை இச்சைச்சென்று
முனகல் மொழி முனகிக்கொண்டு
முட்டும் இதழ், மலரும் என்றால்
முத்தமென அர்த்தம் அன்பே
வா அன்பே, கலந்திடுவோம்
முத்தப்பூவில், தினசேர்ந்திடுவோம்
நாளிதழ் இருபால் மலர்
நாமதில் இரட்டைகிளவிகள்
நா, இதழ் இருபடைவீரன்
நாளெல்லாம் நம்போர் நேரும்...
-கல்லறை செல்வன்