உதட்டோர புன்னகையாலே
கவி எழுதி காதலை சொல்ல
உன் முன்னே நின்றேன்
என்னவனே....!!!
நீயோ ....!!
கொஞ்சிடும் இருவிழியால்
அந்தி வானச் சிவப்பை
அல்லி பூசுகிறாய்
என் கன்னத்தில்....!!!
என் அழகு கள்ளனே....!!
நானும் நாணம்
கொண்டு உன் முகம் பார்க்கையிலே....
உன் உதட்டோர புன்னகையால்
என்னில் தோன்றிய
கவிச் சொற்களை எல்லாம்
களவாடி போகிறாய்
உன் வசீகர புன்னகையால்.... !!