அடி என் கண்மணி

வானவில்லின்
வண்ணம் கொண்டு
வந்தவளே

நிலவின்
ஒளியை
மிஞ்சுகிறதடி
உந்தன் முகம்....

பூக்களின்
மென்மையை
தேகத்தில்
கொண்டு வந்தவளே

கள்வனையும்
மாற்றிவிடுமடி
உந்தன் கயல்விழி

வாழையும்
தோற்க வைக்கிறதடி
உன் வழவழப்பான
கரங்கள்

வெண்பஞ்சு
மேகமாக
உன் பிஞ்சு பாதங்களடி

கார்மேகமாக
உந்தன் நீண்ட
கருங்கூந்தலடி

மொத்தத்தில்
பித்து பிடித்து
சித்தம் கலங்குதடி
அடி என் கண்மணி

எழுதியவர் : உமாபாரதி (4-Dec-18, 10:01 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
Tanglish : adi en kanmani
பார்வை : 393

மேலே