சாயங்கால மழைகள்
இருந்தும் இல்லையென்று
ஜன்னல் கம்பி பிடித்து
மொழியறியா ரோஸிக்குட்டி.
சாலையில் கலையும்
வாகன ஒளிகளில் அலைகிறாள்.
அம்மாவின் புன்சிரிப்பு
முதுகெங்கும் மேய்ந்தாலும்
அப்பாவின் இளஞ்சூடு மனதில்.
அப்பா இன்னும் வரவில்லை
வரும்போது வந்துவிடுகிறது
சாயங்கால மழைகள்...
இன்றும் கிடைக்குமோ
நேற்றுப்போலவே
பூந்திப்பொட்டலங்கள்...
கற்பனைப்படகுகள்
முட்டி முட்டி விழுகின்றன
தூரலில் ஜனித்த
காற்று முட்டைகளில்...
பாண்ட்ஸ் மணக்கும்
அம்மா அள்ளிக்கொண்டு
போகிறாள் கூடத்திற்கு.
வாடைக்காற்று ஆகாமல் போகிறது
ரோஸிக்கும் பூந்திக்கும்...