என் செல்லமே

உன் கரம் தொட்டு./
நான் நாணம் விட்டு./
நம்மோட மூச்சுக் காற்று /
ஒன்றோடு ஒன்று முட்டி./

என்னோட உடல் சூடு பட்டு /
உன் தேகம் வியர்வை கொட்டி./
இரு தேகத்து வியர்வையும்
முத்தமிட்டு./

இதயத் துடிப்பு அதிகரித்து /
ஓடும் குருதியின்
ஓட்டம் அதிகரித்து /
களைந்த உடையை சரி பார்த்து /
களைப்பாறும் வேளையிலே/

எட்டி எட்டி போனவளை;
நீ தொட்டு இழுத்து /
கட்டியணைத்து. /
சுவைத்த இதழில் தடம் பார்த்து /
தடவிக் கொடுத்து./

நீ செல்ல மொழி பேசி/
வளைந்து நெளிந்து /
சுகம் கண்ட கதை தனை
சொல்லி நகைத்து./


இரண்டோடு
ஒன்று வரும் ;
காலம் எப்போது ?
என் செல்லமே./

படம் சொல்லும் கவிதை
அநாகரிகமான கருத்துக்கு தடை 😊

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (6-Dec-18, 7:11 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : en chellame
பார்வை : 354

மேலே