ஓய்வின் நகைச்சுவை 62 ஏரோ பிரிட்ஜ் டோல்

மனைவி: ஏன்னா பிளைனிலே ஏறுவதற்கு முன்னே என்ன பணம் கொடுக்கிறீங்க?

கணவன்: அது புதுசா "ஏரோ பிரிட்ஜ் டோல்" கொடுக்கணுமாம். 15 கிலோ வரைக்கும் பிரீ. அப்புறம் நம்ம வெயிட் 50 கிலோனா 500 ரூபாய் டோல் + 28% GST.

மனைவி: அய்யய்யோ அப்போ எனக்கு 860 ரூபாயா +28%? தெரிஞ்சிருந்தால் 2 மாசம் சாப்பிடாம இருந்திருப்பேனே!

கணவன்: அதுமட்டுமில்லே 700 ரூபாய்க்கு மேலே 10% சர்ச்சார்ஜ் + 5 டைட் செஸ். வெயிட்ட குறைடி, வெயிட்ட குறைடி சொன்னா கேட்டாத்தானே

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (6-Dec-18, 10:19 am)
பார்வை : 47
மேலே