அவள்

வானில் உயர்ந்த கதிரவன்போல்
தடாகத்தில் தண்ணீருக்கு மேல்
உயர்ந்து நிமிர்ந்து பூத்திருக்கும்
மாலுக்குகந்த கமலப்பூ போல்
என்னுள்ளத்தில் உயர்ந்து நிற்கின்றாள்
என்னவள் என் காதலி தன் பேரழகால்
நற்பெண்ணின் நல்ல குணங்கள்
என்னும் பூஷணம் அணிந்து எனக்கும்
வேலியாய் அமைந்து என் மனம்
ஒரு கணமும் வேறொருவளை மனதில்
நினையாதிருக்க சதா தன்பால் ஈர்த்து.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Dec-18, 4:33 pm)
Tanglish : aval
பார்வை : 116

மேலே