ஜனனமும் மகிழ்ச்சிதான்

கனவுகளும் மகிழ்ச்சிதான்
களையாதவரை..
கற்பனைகளும் மகிழ்ச்சிதான்
நிறைவேறும் வரை ..
பூக்களுக்கு மகிழ்ச்சிதான்
வாடும் வரை..
அலைகளுக்கும் மகிழ்ச்சிதான்
கரையை அடையும் வரை ..
மழைத்துளிகளுக்கும் மகிழ்ச்சிதான்
மண்ணில் சேரும் வரை..
தாய்மையும் மகிழ்ச்சிதான்
உன்னை ஈன்றெடுக்கும் வரை..
உன் தாய்மைக்கும் மகிழ்ச்சிதான்
நீ சாதித்த வரை..
உன் ஜனனமும் மகிழ்ச்சிதான்
தாய்மையை பெருமை படுத்திய வரை..