ஷாஜகான்

திரும்பத் திரும்ப ஏனோ நினைவில் வந்து கொண்டே இருந்தது தாஜ் மஹால் நினைவு.மும்தாஜ் மிகவும் கொடுத்து வைத்தவள் அப்பேற்பட்ட காதல் கணவனை அடைவதற்கு

முகலாய மன்னர்களில் பேசப்படுபவர்கள் ஹூமாயூன்
ஹூ மாயூன் மகன் அக்பர்
அக்பரின் மகன் ஜஹாங்கீர்
ஜஹாங்கிரின் மகன் ஷாஜகான்

ஷாஜகான்
பாரத நாட்டின் மிகப் பெரிய பள்ளிவாசல் எனப் புகழ் பெற்ற ஜும்மா மஸ்ஜித் அவனுடைய படைப்பு தான்

இன்றைய டில்லியின் வடிவமைப்பை தொடங்கி வைத்தவன் ஷாஜகான் தான்

தலைநகர் தில்லியின் பாதுகாப்புக்காக 6664 கெஜம் வட்ட வடிவமுள்ள ஒரு பெரிய மதிலை கட்டினான்

டெல்லி செங்கோட்டையை அவன் தான் உருவாக்கினான்

அதன் மேல் 27 கொத்தளம்
17 வாயில்கள் அமைத்தான்
தண்ணீர் தேவைக்காக யமுனையிலிருந்து பக்க" வாய்க்கால்கள் வெட்டினான்

ஷாஜகான் ஒரு சோக காவியத்தின் கதாநாயகன்
ஷாஜகானுக்கு
தாரா
ஷூஜா
ஒளரங்கசீப்
முராத்
என நான்கு பிள்ளைகள்

தாரா, ஷூஜா, முராத் மூவரையும்
ஒளரங்கசீப் கொலை செய்தான்

ஷாஜகான்
காதல் மனைவிமீது கொண்ட அன்பின் மிகுதியால் ஒரு மனிதன் இந்தஉலகம் இருக்கும் வரை பேசப்படும் நினைவு சின்னத்தை உலகத்திற்கு விட்டு விட்டுப் போய் இருக்கிற பேரரசன் அவன்
பெருங் காதலன் அவன்

ஷாஜ கானின் மூன்றாவது மனைவி மும்தாஜ்

அவர்களுக்கு 14 பிள்ளைகள்

14 வதுபிள்ளையான குகாரா பேகம் பிறந்த போது பிரசவம் முடிந்த கையோடுமும்தாஜுக்கு திடீரென்று ஜன்னி பிறந்தது உடம்பு தூக்கிப் போட்டது

தகவல் ஷாஜகானுக்குப் போகிறது
பதறிப் போய் ஓடி வந்த மன்னர் அருமை மனைவியை "அய்யோ... என்று அழுது கொண்டே தூக்கி மடியில் கிடத்துகிறார்

சில நொடிகள் கணவரின் கைகளை அழுத்தமாக பிடித்துக் கொண்டிருந்த மும்தாஜின் தலை சாய்கிறது மும்தாஜ்இறந்து விடுகிறாள்

ஆசை மனைவியின் அகால மரணத்தின் அதிர்ச்சியிலிருந்து மீண்ட அரசன் அவளுக்காக ஒரு நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டுமென்று எண்ணுகிறான்

தாஜ்மகாலைக் சுற்றிப் பார்த்த விவேகானந்தர் சொன்னாராம்
"இங்குள்ள சலவைக் கல் துண்டு ஒன்றைப் பிழிய முடியுமானால்
அதிலிருந்து கூட அந்த அரசனின் காதலும் சோகமும் சொட்டும்

இதன் உள்ளே உள்ள அழகு வேலைப்பாட்டை கற்க வேண்டுமானால் ஒவ்வொரு சதுர அங்குலத்திற்கும் ஆறு மாதமாவது தேவைப்படும்

அழகான யமுனை நதிக்கரை
அந்த அழகான இடம்
அந்தக் காலத்தில் அங்கே இருந்த மிகப் பெரிய தோட்டம்
ராஜா புத்திர மன்னர் ஜெய்சிங்குக்கு சொந்தமானது

அந்தத் தோட்டத்தை விலைக்கு வாங்க நினைத்த ஷாஜகான் ...
பணமாகக் கொடுத்தால் ஜெய்சிங் தப்பாக நினைப்பாரோ
தர்மசங்கடப்படுவாரோ என நினைத்து

தனக்குச் சொந்தமான நான்கு அழகான அரண்மனைகளை ஜெய்சிங்குக்கு தந்து விட்டு இந்தத் தோட்டத்தை பரிவர்த்தனை கொண்டார் செய்து எடுத்துக் கொண்டார்

தாஜ்மகாலை நான்பார்த்த போது டெல்லியில் கப்பட்ட பட்டிருந்த ஷாஜகானின் முப்பாட்டன்ஹூமாயூன் கல்லறையின் பெரிய வடிவமாகத் தான் தோன்றியது எனக்கு

அது உண்மையாகக் கூட இருக்கலாம்.
தன்மனைவியின் கல்லறை தன் மூதாதையரின் கல்லறை போல இருக்க வேண்டும் என்று யோசித்து

அதைப் போலவே ஆனால் அதனினும் பெரிதாய் முழுக்க முழுக்க சலவைக்கற்களால் கட்ட வேண்டும் என்று ஷாஜகான்நினைத்து இருக்கலாம்

தாஜ்மகாலுக்கு வரைபடம் தயாரித்தவர்

வெனிஸ் நகரப்பொற்கொல்லரும் சிற்பியுமான வெரோனியோ

துருக்கிய கட்டடக் கலைஞர் உஸ்தாத்
இஸா அபாண்டி

லாகூரைச் சேர்ந்த உஸ்தாத் அஹமத் என்று

வரலாற்றுஆசிரியர்கள்ஒவ்வொருவரும் ஒரு பெயரைச் சொன்னாலும் உண்மையில் ஷாஜகானின் மனதில் தன்முப்பாட்டன் கல்லறை தான் முன்மாதிரியாக" இருந்திருக்க வேண்டும்

பெரும்பாலும் தன் மூத்தோரின் சமாதிகளைப் போலவே இதுவும் பாரசீகக் கட்டிடக்கலை வகையைச் சேர்ந்ததாக இருக்க வேண்டுமென்றே நினைத்திருக்கிறான்

அதைக்காட்டித்தான்" வரைபடத்தை அவன் வடிவமைத்து இருக்க வேண்டும்
இன்றைக்கு சரியாக 386 ஆண்டுகளுக்கு முன்பு 1632ல் கட்டட வேலை தொடங்கி 1652 ல் முடிந்து இருக்கிறது இருபது ஆண்டு காலம் இந்த அழகிய கட்டடத்தை கட்டி இருக்கிறான்

முழுவதும் சலவைக்கற்களால் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தினுடைய கட்டடப் பகுதிக்கு சலவைக் கற்களை எடுத்துச் செல்ல

ஆறு மைல் தூரம் சாரம் எனப்படும் சாய்தளப்பாதைமண்ணால்மேடுஅமைக்கப்பட்டது

இருபது முதல் முப்பது எருதுகளைக் கொண்டு இதற்கென தயாரிக்கப்பட்ட வண்டிகளில் சலவைக்கற்களை ஏற்றி வந்து இருக்கிறார்கள்

இந்தக் கட்டிடப்பணியை வடிவமைத்தவர்கள் எதிர்காலத்தில் இது போன்று வேறு ஒரு கட்டி டத்தை உருவாக்கி விடக் கூடாது என்பதற்காக அந்தசிற்பிகளின் கைகள் வெட்டப்பட்டதாக வழி வழியாக கூறப்படுகிறது

ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை

தாஜ்மகாலின் வெளிப்புற கதவுகள் சுவர்கள் இவற்றில் முத்துபவளம்வைரம் வைடூரியம் கோமேதகம் என ஒன்று விடாமல் பதித்தாராம்

கல்லறையைச் சுற்றிலும் சுவர்களில் புனித குர்-ஆன் வாசகங்களை செதுக்க வேண்டுமென்று எழுத்தோ வியங்களை செதுக்குவதில் திறமையான ஒருவரை
தேடியபோது

பாரசீகத்தைக் சேர்ந்தஅமானாத்கான் என்பவர் கண்டெடுக்கப்பட்டார்

அமானாத்கான்" நான் எங்கு எதில் என் எழுத்தோவியங்களை வரைந்தாலும்
கீழே என் கையெழுத்தை செதுக்கி போட்டுக் கொள்வேன்
சம்மதமானால் வருகிறேன்

என்று சொல்ல ஒப்புக் கொண்ட ஷாஜகான் அவருடைய கையெழுத்தை போட்டுக் கொள்ள சம்மதித்தார்

இன்றைக்கும் தாஜ்மகாலில் செதுக்கப்பட்டிருக்கும் ஒரே கைஎழுத்து
அமானத் கான் கையெழுத்து மட்டும்தான்

மொகலாய ஆட்சிக் காலத்தில் முஸ்லீம்கள் மட்டுமே தாஜ்மகாலில் அனுமதிக்கப்பட்டனராம்

....... தன் சகோதரர்களுடன் அரசுரிமைப் போரில் ஈடுபட்டு வென்ற ஒளரங்கசீப் தன் தந்தை ஷாஜகானை பதினெட்டு ஆண்டுகள் ஆக்ராசிறையில் அடைத்து வைத்திருந்தார்

ஷாஜகானுக்கு எழுதுவதற்கான பொருட்கள் மாற்று உடைகள் கூட மறுக்கப்பட்டது
அவர் அணிந்திருந்த ஆபரணங்கள் கூட அகற்றப்பட்டது

பெரும்பாலான பொழுதை சிறையில் இருந்த ஜன்னல் வழியாக தொலைவில் தெரிந்த தாஜ்மகாலை பார்த்து பார்த்து காலம் கழித்தார் ஷாஜகான்

கடைசிக் காலத்தில் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்து எழுந்து உட்காரவும் முடியாத நிலையில்

தாஜ்மகாலை பார்க்க வசதியாக அவர் அருகே ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி வைக்கப்பட்டதாம்

தன்னுடைய எழுபத்து நான்காவது வயதில் 22. 1 1666 ல் அவர் இறந்து போகிறார்

இறந்து விட்டப்போதும் ஷாஜகானின் தலை
அருகில் இருந்த கண்ணாடியின் பக்கம் திரும்பி இருந்ததாம்

தாஜ்மகாலைப் பார்த்துக் கொண்டே உயிரை விட்டிருக்கிறார் ஷாஜகான்

நல்ல நிலாக் காலத்தில் எத்தனை எத்தனை இரவுகளில் தன் ஆசை மனைவியின் நினைவுகளை

தன் மகன் அமைத்த சிறைச்சாலையிலிருந்து எண்ணி எண்ணி அசை போட்டு அழுது இருப்பான் அந்த முன்னாள் பாதுஷா

தான் இறந்த பிறகு தன் ஆசை மனைவிக்கு கட்டிய கல்லறை போலவே கறுப்பு நிற சலவைக்கற்களில் தனக்கு கல்லறை கட்டப்பட வேண்டும் என்று விரும்பினாராம் ஷாஜகான்

அது வீண் செலவு .... தாஜ்மகாலிலேயே இடம் இருக்கிறது அவர் மனைவியின் கல்லறையின் அருகிலேயே அடக்கம் செய்யலாம் என்று மகன் ஒளரங்கசீப் சொல்லி விட

அதன்படியே ஷாஜகானின் உடல் தாஜ்மகாலுக்கு கொண்டு செல்லப்பட்டு மும்தாஜ் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது

நல்ல மகன்'.

அற்புதமான இந்தக் கல்லறை
அதிசயமான இந்தக் கல்லறை
பிற்பாடு ஆட்சிக்கு வந்த பிரிட்டீஷ் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு பொறாமையை எரிச்சலை ஏற்படுத்தியது

லார்டு வில்லியம் பென்டிக் பிரபு என்பவர் தாஜ்மகாலை இடித்து விடலாம் என்று யோசனை சொன்னாராம்

அதில் பதிக்கப்பட்டிருந்த முத்துபவளம் வைரம் வைடூரியம் கோமேதகம் வெள்ளைக்காரர்கள் சுரண்டி எடுத்துக் கொண்டு போய் விட்டனராம்

இன்னும் சிலர்" தாஜ்மகாலை ஒவ்வொரு கல்லாக அகற்றி கப்பலில் ஏற்றி இங்கிலாந்துக்கு அனுப்பி அங்கே ஒரு பெரியதோட்டத்தில் மீண்டும் பொருத்தி கண்காட்சியாக வைக்கலாம்" என்றனராம்

நல்ல வேளையாக கலையுள்ளம் கொண்டவைஸ்ராய் கர்ஸன் பிரபு இந்த யோசனைகளை நிராகரித்ததுடன்

தாஜ்மகாலை நல்ல முறையில் பராமரிக்க ஏற்பாடு செய்ததுடன்

கெய்ரோவிலிருந்து பித்தளையாலான
பெரிய அழகான விளக்கு ஒன்றை ஷாஜகான் மும்தாஜ் கல்லறைக்கும் மேல் தொங்கவும் விட்டார்

நான் அந்த தாஜ்மகாலைப் பார்த்த போது ..
அதன் பிரமாண்டம் அழகு வடிவம் இவைகளை பார்த்த போது
நண்பர்களே
எனக்கு நானே இப்படிச் சொல்லிக் கொண்டேன்

"ஷாஜகான் இந்த உலகத்தில் எத்தனையோ பேரரசர்கள்
பிரபுக்கள்
சர்வாதிகாரிகள் வாழ்ந்தார்கள்
எல்லாரும் செத்துப் போனார்கள்

ஆனால்
நீ மட்டும் சாகவில்லை
உனக்கு மரணமில்லை
நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்
தாஜ்மகாலாய்"

எழுதியவர் : உமாபாரதி (9-Dec-18, 3:15 pm)
Tanglish : shajakaan
பார்வை : 603

மேலே