அவள் பார்வை
கல்லாய் இருந்த என் மனதை
அவள் கூரிய பார்வைப் பட்டு
குடைந்தது,கடைந்து என் இதயத்தில்
தன்னையே சிலையாக்கி அமர்ந்தது
அச்சிலையே 'அவள்' எந்தன்
ஆருயிர்க் காதலி என்று என் மனது
சொன்னது இப்படித்தான் பார்வையிலே
ஒரே பார்வையிலே என் இதயத்தில்
வந்தமர்ந்த பாவை அவள்.