காலம் போன் போன்றது

காலம் பொன் போன்றது
ஞாலம் நமக்காக நிற்காது
காத்திருந்து மீண்டும் சுழலாது !
நாளைய உலகம் நமதென்று
நம்பிக்கை விதை விதைத்து
விளைச்சலின் பயனை பெற்றிடுக !
முன்னேறும் பாதையில் முட்களுண்டு
பின்வாங்கும் எண்ணத்தைக் கைவிடு
இலக்கை அடைந்திட வீரநடைபோடு !
நாட்டின் எதிர்காலம் உன்கையில்
வீட்டின் பொற்காலம் உன்உழைப்பில்
உள்ளத்தின் உறுதி உன்குருதியில் !
பழனி குமார்