அவள் மெல்ல சிரித்தாள்
![](https://eluthu.com/images/loading.gif)
அவள் குளித்தாள் இதமாக
நீர் தழுவியது அவளை சுகமாக..
துவாலையில் துவளும் கூந்தலாக
வான் மாறியது இருள் மேகமாக..
சேலை கட்டினாள் லாவகமாக
சிற்பிகள் செதுக்கிய சிலையாக..
நடை பயின்றாள் ஒயிலாக
நாணும் அன்ன நடையாக..
இடை அசைத்தாள் இதமாக
படரும் முல்லை கொடியாக..
மெல்ல சிரித்தாள் கனிவாக
கிள்ளத் தூண்டும் பூக்களாக..
கள்ளப் பார்வையோ அம்பாக
என் கற்பனை மாறியது கவிதையாக....