இளவரசி
பின்பமும் உன்னை பார்த்து வியந்து இருக்கும்
நிழலுக்கும் உன்னோடு நடமாட பிடித்து இருக்கும்
உன்னை சுவாசித்த காற்றெல்லாம் மெய் மறந்து திரிந்திருக்கும்
உன் மீது ஒளி பட்டவுடன் சூரியனுக்கே கண் கூசி இருக்கும்
நிலவெல்லாம் கரை மீது அமர்ந்து உன்னோடு பேச காத்திருக்கும்
நடுநிசியில் கதிரவன் உன்னை காண கடலை தாண்டியிருக்கும்
இயற்கையை மாற்ற கற்று தந்த அழகிய இளவரசி நீயடி