தேரையச்சித்தரின் பதார்த்த குண சிந்தாமணி

தேரையச்சித்தரின் ( பதார்த்த குண சிந்தாமணி )

தேரைய சித்தர் தான் எழுதியப் பதார்த்த குண சிந்தாமணியின் நூலுக்குக் காப்பாக வினாயகரையும் கந்தனையும் துதித்து ஒரு வெண்பா எழுதியுள்ளார். அது வருமாறு
`
ஆதி யுமைக்கருள்செய் அற்புதசிந் தாமணியை
யாதி யுமையருளாள் அப்புவியுட் -- கோதறுநற்
செந்தமிழாற் கூறுதற்கு செம்பவள வேழமுகன்
கந்தமலர்ச் செஞ்சரணங் காப்பு

இந்தப்பாடலை தேரையர் அழகாகச் சீர்பிரித்துத் தளையமைத்து , அடி எதுகை, மோனை இயைபுடன்தான் எழுதியுள்ளார். ஆனால் 1900 ஆம் ஆண்டு அச்சடித்த அச்சகத்தார் சீர்குலைத்து காயையும் மீறி பூவுக்குள் சென்று பாட்டைக் கெடுத்து வெளியிட்டுள்ளார்கள். அந்தப்பாடலை தேரையர் எழுதிய வார்த்தைகளை மாற்றாமல் சரியானபடி சீர் பிரித்து அவர் எழுதியது வெண்பாதான் என்பதைத் தெரிந்துகொண்டேன். ஆனால் புத்தகத்தில் உள்ளாதோ கீழ்க் கண்டவாறு உள்ளது.

ஆதியுமைகருள் செயற்புத சிந்தாமணியை
யாதியுமையருளா லம்புவியுட் கோதறுநற்
செந்தமிழாற் கூறுதற்குச் செம்பவளவேழமுகன்
கந்தமலர்ச் செஞ்சரணங் காப்பு


இந்தப் புத்தகத்தை வெளியிட்டவர்கள் ஆயிரம் தவறுகளுக்கும் மேலே சித்தர் சொற்களைத் தவறவிட்டு வெளியிட்டுள்ளார்கள். அதனாலே இந்தப் புத்தகம் மறுபதிப்பில்லாமல் போனதோ என்னவோ? இதன் பிரதிகள் எங்கும் கிடைப்பதில்லை.

பரமசிவ வணக்கம்..

எல்லாப்பதார்த்தமுமா யெங்குநிறையொன்றைமுன்நூற்
சொல்லாப்பதார்த்தத்தைத் துப்புரவை - வல்லார்கள்
கூடப் பதார்த்தைக் கொண்டேத்திக் கூறு துமியாங்
கோடற் பதார்த்த குணம் . (புத்தகத்தில் உள்ளது.)

பிழை நீக்கி எழுதப்பட்டது கீழே உள்ளது..

எல்லாப் பதார்த்தமுமாய் எங்குநிறை யொன்றைமுன்நூற்
சொல்லாப் பதார்த்தத்தைத் துப்புரவை - வல்லார்கள்
கூடப் பதார்த்தத்தைக் கொண்டேத்திக் கூறுமியாங்
கோடற் பதார்த்த குணம்

பரிசுத்தமான வல்லவர்கள்தான் எங்கும் நிறையாயுள்ள எல்லா பதார்த்தத்தையும் ஏற்றிச் சொல்வார்கள். மற்றவர்களால் நூற்றுக்கணக்கான பதார்த்த மூலிகைகளின் குணங்கள் சொல்லாமல் விடப்பட்டுள்ளது. வள்ளுவர்கூட அவர் எழுதிய வைத்தியம் 800 எனும் நூலில் கற்ப மூலிகைகள் முயன்றதருபது என்று அரிய மூலிகைவகைகளை மட்டும் குறிப்பிட்டுச் சொல்கிறார்.

அகத்தியரின் பாராட்டைப் பெற்ற பிரதமச் சீடர் தேரையரின் பெயர் தேவதத்தன் என்று எங்கோக் கண்டு படித்த ஞாபகம் உள்ளது ,அதை விரைவில் தெரியப்படுத்துகிறேன். இருப்பினும் தேரையர் என்பவர் ஒருவர்தான். அவர் எந்த சித்தரும் செய்யாத அதாவது நாம் உண்ணும் உணவு , மச்ச, மாமிசம் வகைகள், மருந்துக்குப் பயன்படும் தாவர மூலிகைகள், கார சார (உப்புப் புளி) நவபாஷான, 64 பாஷான நவலோக, நவரத்தினம பூநீறு, நவலோக, பஞ்ச பூதங்களான பிருத்திவி, அப்புத், தேயு, வாயு, விசும்பின் குணங்களையும், பால், தாயி, மோர், வெண்ணை நெய், மரம் செடி, கொடிதாவரம், சமூலம், இலைப், பூ,, காய், பழம்,,வேர் தண்டு, அன்றாட வாழ்க்கையின் நடை முறையின் நன்மைத் தீமைகள் எனப் பலதும் மானிடர்க்கும், வைத்தியர்க்கும், தாழ்ந்த உலோகத்தை தங்கமாக்கும் வித்தை தெரிந்த ரச வாதிகளுக்கும், வேண்டிச் சொல்லியுள்ளார், ,இந்தப் பதார்த்த குண சிந்தாமணியில் சுமார் 1600 பாடல்களும், இதுவும் அது என்று இன்னும் பலப் பாடல்கையும் எழுதியுள்ளார். எல்லாத் தமிழ்மக்களும் . ஏனைய மக்களும் இப்புத்தகத்தைப் படித்துப் பயன்பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தொடரும்

எழுதியவர் : பழனிராஜன் (14-Dec-18, 11:00 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 152

மேலே