வேண்டுதல்

மறதி வேண்டும்,
அறிந்தும் தவறுகளை செய்திடும்,
அறிவற்றவர்களை நினையாமல் இருக்கவே!

மன்னித்தல் வேண்டும்,
செய்த தவறுதனை உணர்ந்து,
பணிந்திடுவோர் இடமே!

கோபம் வேண்டும்,
அதர்மம் நாளும் செய்திடும்,
அநியாயக் காரர்களைக் காணும் இடத்தே!

விட்டுக் கொடுத்தல் வேண்டும்,
உண்மை நிலை அறிந்து,
வினையது கண்டு, விலையது தவிர்க்கவே!

எழுதியவர் : arsm1952 (15-Dec-18, 8:01 pm)
சேர்த்தது : arsm1952
பார்வை : 238

மேலே