காகித கப்பல்

குழம்பிய நீரில்
தெளிவாய் பயணித்த அச்சிறுமியின்
காகித கப்பலில் மழைதுளி விழுந்து மூழ்கியது
மூழ்கிய கப்பலின் மேலே பயணித்துக்கொண்டிருந்தன நீர்குமிழிகள்
பிறகு நீர்குமிழிகள் மறைந்து புதுபுது நீர்குமிழிகள் வந்தன
ஆனால் அந்த கப்பல் மூழ்கியதை தவிர மறையவில்லை
மறுபடியும் அந்த கப்பலின் பாகங்கள்
தனிதனியாக பயனிக்கும்.................................

எழுதியவர் : பேய்க்கரும்பன்கோட்டை அகி (15-Dec-18, 3:45 pm)
Tanglish : kaakitha kappal
பார்வை : 1729

மேலே