கவிதை - அழகு தமிழ்
அழகு தமிழ்
அழகை கண்டதும், ஆச்சர்யமடைந்தேன்!
அவளை கண்டதும், அசந்துபோனேன்
ஆகா... அவள் அழகைவிட
அழகாயிருக்கிறாளே என்று ...!!
அழகான அவளை
தமிழின் வார்த்தைகளைக்கொண்டு
கவிதைகளாக வர்ணித்தபின்
முடிவுக்கு வந்தேன்
அவளைவிட தமிழே
அழகு என்று......!!!
அழகைவிட அவள் அழகு,
அவளைவிட தமிழ் அழகு!
அன்புடன்
வி. விவேக்
14/12/2018