காதல் மனசு
![](https://eluthu.com/images/loading.gif)
💗💗💗💗💗💗💗💗💗💗💗
*காதல் கவிதை*
*கவிஞர் கவிதை ரசிகன்*
💗💗💗💗💗💗💗💗💗💗💗
இனியவளே
முவ்வாயிரம் முடிச்சு போட்டிருப்பேன்
நாளை
உன் கழுத்தில்
மூன்று முடிச்சு போட வேண்டுமே
அதற்கு
ஒத்திகை பார்த்ததில்....
நான் சாப்பிட அமரும்போதெல்லாம்
சாப்பாட்டை
பிசைந்து கொண்டே இருப்பேன்
சாப்பிடுவதில்லை...
நம் திருமணம்
முடிந்தவுடன்
உனக்கு
சோறூட்டும் நிகழ்ச்சி
நினைவுக்கு வந்து விடுவதால்....
கருப்பா இருந்த என் நெற்றி
சிவப்பாய் மாறிவிட்டது
நம் திருமணத்தில்
உன் வட்ட முகத்தில்
பொட்டு வைக்கும் போது
கோணலாக வைத்து விடுவேனோ
என்று என் நெற்றியில்
பொட்டு வைத்த
பயிற்சி செய்ததால்.....
என் தங்கை
என்னை
கேலி கிண்டல் செய்கிறாள்
நாளை
உன்னை
முதன்முதலாக
தொட்டுப் பேசுவது
சுண்டுவிரல் என்பதால்.....
அதை அடிக்கடி
தொட்டுப்பார்த்த ரசித்துக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டதால்....
இப்போதெல்லாம்
என் வீட்டு கதவை
நான்
தாள் போடுவதே இல்லை
வீட்டுக்கதவை
இரவில்
தாள் போடச் சென்றாள்
உடனே!
நம் முதலிரவு அன்று
நீ
பால் சொம்போடு
கதவை தாள்போடும் காட்சி
நினைவுக்கு வந்துவிடுவதால்....
கனவுகள் எல்லாம்
என்று தான்
நிஜமாக போகின்றதோ....!
☘☘☘☘☘☘☘☘☘☘☘