ஒரு நொடி

துயிலுரிக்கையில் கரங்கள் எட்டும் தொலைவில்
தேனீர் கோப்பையுடன் என்னவன்...
பல் துலக்கயில்
பதமான நீரை
பக்குவமாய் தயார்படுத்தி வைத்திருந்தான்
பயமில்லாமல் குளித்தும் வா-இன்று
பகல் முழுதும் உனக்கு அனைத்துமாய் நான் என்று
உடை நேர்த்தியாய் அணிந்து வந்தேன்-என்னவன்
உள்ளம்தனை கொள்ளை கொள்ள-காலை
உணவுடன் காத்திருந்தான்...
பசி மட்டும் ருசி அறியாது என்றில்லை
பாசமும் ருசி அறியாது என்று இன்றுதான்
கண்டுகொண்டேன்...
பேச வார்த்தைகள் வரவில்லை
பேசி தீர்ந்து போகும் வரை பெரிதாய் பேசியதுமில்லை...
அழுது அழுது அலுத்துப்போயிருக்கிறேன் பலமுறை
ஆனால் ஆனந்தத்தால்
கண்கள் இன்று குளமானதை
கள்வன் இவனும்
கண்டுவிட்டான்...
கன்னங்களை வருடிவிட்டான்
கண்ணீரை மெல்ல துடைத்துவிட்டான்
மூச்சு காற்று தீண்டிய அடுத்த நொடி
முத்த புயலும் தாண்டவம் ஆடியது
புன்னகையை மறைக்க முயல-அவன்
புருவம் இன்னும் வெக்கமா என்று வினவியது....
இதற்குமேல் முடியாதென்று
இதழ் சுளித்து
ஓடி ஒழிந்தேன் அறைக்குள்
ஒரு நொடி முடிவதற்குள்
ஓங்கி அறைந்தான் கன்னத்தில்
பொறி கலங்கி
துயில் களைந்து
துரிதமாய் எழுந்து நின்றேன்....
இன்னும் என்னடி தூக்கம்???
எழுந்து வேலையை கவனி என்றான்...
இல்லை இல்லை
வேலையை கவனிஎன்றார்ர்ர்ர்
கனவு ஒரு நொடி
கடந்து செல்லகூடாதா என்று
கவலை பட தோணாமல்
அடுப்பங்கரை நோக்கி பயணம்
~ஷாகிரா பானு💝