உங்களுக்கு எப்போவாச்சும் இப்படி😎

மிதமிஞ்சிய பகல் ஒன்று
கோலகலமாய் முடியுமுன்
ஒற்றை சாலையில்...
சற்று ஈரத்தின் வாசனை பூசி
தன்னை நெகிழ்த்தும் அந்தியில்
வாய்ப்பற்று சரிந்து கொண்டிருந்த
மாலை அமைதி எதுவும் பேசாது
கால்கடுக்க நின்று கொண்டிருந்த
அந்த திருப்பத்தைக்கடந்து....
சற்று அடர்ந்த மரமொன்றில்
தனக்குத்தானே ஏதோவொன்றினை
திக்கித்திக்கி பேசும்அப்பறவையை
தாண்டுகையில் வீழ்ச்சியுற்ற
மனதை சற்று தேற்றிக்கொண்டு...
யாருமற்ற சாலையில்
உரக்கப்பேசும் தனிமையின்
சீழ் படிந்த தர்மங்களை
அவமானத்துடன் கேட்டபடியே
முகம் நோக்கும் பாதையை
ஈவின்றி மிதித்தபடி
கொல்லத்துணிந்த நாட்களில்
வசமிழந்து வழுக்கிதாவிய
சூட்சமத்தில்--பெருமை கொதித்ததை
புன்முறுவலுடன் எண்ணியபடி
விசை கூடிய நடையுடன் போக...
இன்னொரு திருப்பத்தில் நான்
அவளை பார்த்தேன். அவளும்
என்னை பார்த்தாள்..
ஒருசில நொடிகள்...
பின்னர் அவரவர் பாதையில் சென்றோம்.

எழுதியவர் : ஸ்பரிசன் (16-Dec-18, 7:00 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 77

மேலே