எல்லாம் சாத்தியமே

காகிதத்தில் எழுதா கடிதமும்,
கண்ணால் காணாத நட்பும்,
காசிடையில்லா பரிவர்த்தனையும்,
தகுதியறியாமலே ஆலோசனைகளும்,
தாள்கள் இல்லா புத்தகங்களும்,
படிதாண்டமலே பல் பொருள் வியாபாரமும்,
பட்டங்கள் பெறாமலே பல்கலை அறிவும்,
அறிவியல், பூகோளம், விஞ்ஞானம்,அரசியல்,
கோளரங்கம்,மருத்துவம்,விவசாயம்,
அனைத்தும் கற்றிடவும், அனர்த்தமும் பார்த்திடவும்,
கையடக்க கணனியால் எல்லாம் சாத்தியமே!
பெறுவது அறிவு, மாற்றுப் பயன்பாடு பேரழிவே!

எழுதியவர் : arsm1952 (18-Dec-18, 12:59 pm)
சேர்த்தது : arsm1952
பார்வை : 79

மேலே